அதிமுக அரசுக்கு முன்னரே அறிவிப்புகளை வெளியிடும் பாமக! டாக்டர் ராமதாஸ் வெளியிடுகிறார்!  - Seithipunal
Seithipunal


பா.ம.க. 17 ஆவது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வரும் 6-ஆம் தேதி அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிடுகிறார் என அக்கட்சி தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 

பாட்டாளி மக்கள் கட்சி  கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் பொது நிழல் நிதிநிலை அறிக்கைகளை  மக்கள் மன்றத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 16 நிழல் நிதிநிலை அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ள நிலையில், 2019-20 ஆம் ஆண்டுக்கான, 17-ஆவது பொது நிழல் நிதிநிலை அறிக்கை நாளை மறுநாள் 6-ஆம் தேதி புதன்கிழமை வெளியிடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை தியாகராயர் நகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் நாளை மறுநாள் புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடவுள்ளார். 

வழக்கம்போலவே தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்புப் பெருக்கம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு பெருக்கம்,  வறுமை ஒழிப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அற்புதமான ஆலோசனைகள் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது" என ஜிகே மணி தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு சார்பில் பிப்ரவரி 8 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பாமக தன்னுடைய பட்ஜெட்டை வெளியிட முடிவு செய்துள்ளது. பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கைகள் என்றாலே அதில் பல சிறப்பம்சங்கள் இருக்கும் என இதுவரை ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கும் கட்சி தலைவர்களும் பாராட்டிய வரலாறும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk shadow budget on feb 6th by dr ramadoss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->