சட்டப்பேரவையில் காட்டமாக கத்திய ஜிகே மணி! வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம் - என்ன நடந்தது ?! - Seithipunal
Seithipunal



சட்டமன்றத்தில் நேற்று வன்னியர் 10.5% விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றி மிகக் கோபமாக பாமக எம்எல்ஏ., காட்டமாக கத்தி பேசியதுடன், வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம் குறித்து சபையில் காரசாரமான விவாதம் நீண்ட நேரம் நடைபெற்றது.

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஜி.கே.மணியின் உரை : வன்னியர் 10.5% இட ஒதுக்கீடுட்டுக்கு அரசுக்கு பரிந்துரைக்கும் பிற்பட்டோர் ஆணையை காலக்கெடுவை 6 மாதம் நீட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. 3 மாத காலக்கெடுவை கொடுத்து எதுவும் செய்யாமல் காலம் கடந்த  நிலையில் மேலும் 6 மாத காலம் நீட்டிருப்பது தேவையற்றது. 

ஏன் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும். முதலில் 3 மாதம் காலம் கொடுத்து விட்டு மேலும் 6 மாத காலம் நீட்டிக்கலாமா? அப்படியே எடுத்துக்கொண்டால் கூட ஒரு மாத காலம் நீட்டிருத்திருக்கலாம். 

எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள், எங்கள் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளார்கள். காலம் தாழ்த்தாதீர்கள். ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றுங்கள் வன்னியர்கள் சமூக,பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பில், மிக மிக பின்தங்கிய நிலை. தமிழ்நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட சமுதாயம். சிறு குறு விவசாயிகளாக, விவசாய தொழிலாளர்களாக, கூலி தொழிலாளர்களாக, வாழும் நிலை உள்ளது. 

அதிகமாக குடிசைகளில் வாழக்கூடியவர்கள், ஆடு, மாடு மேய்த்து வாழக் கூடியவர்கள், தனிநபர் வருமானத்தில் மிக குறைந்த வருமானம் உள்ளவர்கள். ஒவ்வொரு ஆண்டும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சியில் கடைசியில் இருக்கிற 20 மாவட்டங்களில் வன்னியர்கள். 

மேற்படிப்பிற்கு செல்ல முடியாத நிலை. RDO, சப் கலெக்டர் பதவிகளில் 2020 ஆம் ஆண்டு தேர்வில் ஒரு வன்னியர் கூட தேர்வு பெறவில்லை. குரூப்-1 பதிவுகளில் மொத்தமே இரண்டு விழுக்காடு மட்டுமே உள்ளனர். குரூப்-2 பதிவுகளில் மொத்தம் மூன்று விழுக்காடு மட்டுமே. இதே போலதான் IAS,IPS உயர்ந்த பதவிகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள். IAS செயலாளர் பதவியில் ஒருவர் கூட இல்லை.21 பல்கலைக்கழகங்களில் ஒரு துணை வேந்தர் கூட இல்லை.

இது சமூக அநீதி இல்லையா? நீதி கேட்பது தவறா? தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக வரவேண்டும் என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமுதாயமாக இருக்கின்ற வன்னியர்கள் எல்லா நிலைகளிலும் முன்னேறாமல் எப்படி தமிழ்நாடு முன்னேறும்.

என்று ஆவேசமாக பேசிய ஜி கே மணி, இனி மேலும் காலம் தாழ்த்தக்கூடாது. உடனே நிறைவேற்ற வேண்டும். அடுத்து மருத்துவம், தொழிற்கல்வி உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையும், அரசின் பல துறைகளில் அரசு பணி நியமனங்கள் நியமிக்கப்படுவதில் வன்னியர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். எனவே ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி பேசினார். 

மேலும், இப்படி வன்னியர்களுக்காக இட ஒதுக்கீடு உரிமையை பேசுகின்ற அதே நேரத்தில் எல்லா சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீட்டை பிரித்துக்கொடுங்கள் என்று தானே சொல்கின்றோம். இதில் என்ன தவறு இருக்கின்றது என்று ஜிகே மணி கேட்டார்.

இடையிடையே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, மாண்புமிகு மணி அவர்கள் பேசுவது அவை குறிப்பில் ஏறாது என்று வாதம் செய்து கொண்டே இருந்தார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் குறிப்பாக ஜி.கே.மணி : அவைக் குறிப்பில் ஏறினால் என்ன? ஏறாட்டி என்ன? அதைப்பற்றி கவலை இல்லை. எனக்கு 10.5% இட ஒதுக்கீடு வேண்டும். உத்திரவிட்டால் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்திற்கு தேவையான தரவுகளை, புள்ளிவிவரங்களை வாங்கிவிடலாம். TNPSC க்கு, TRB க்கு, MRB க்கு மற்றவற்றிற்கு எல்லாம் உத்திரவிடுங்கள். எப்படியானாலும் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என காரசாரமாக சத்தம் போட்டு வாதம் செய்தார்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, மணி தலைவர் அவர்கள் ஆக்ரோஷமாக பேசுகிறார். அவர் இப்படி கோபப்பட்டதை எப்போதும் நாங்கள்பார்த்தே இல்லை .மணி அவர்களே கோபப்படாதீர்கள், உணர்ச்சிவசப்படாதீரகள் என்று பேசினார். 

தொடர்ந்து பேசிய ஜி கே மணி : மருத்துவர் அய்யா அவர்களின் 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டத்தால் 21 பேர் உயிர் தியாகத்தால் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பிரிவை உருவாக்கி 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினார். 

அதன் பின்னர் வன்னியர்களுக்குரிய இடம் கிடைக்காததால் தொடர்ந்து குரல் கொடுத்தும் போராடியும் வந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 10.5% இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்கினார். 

அதன்பின்னர் நீதிமன்றத்தில் பாதிப்பு ஏற்பட்டவுடன் இப்போதைய முதலமைச்சர் அவர்கள் 10.5% நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் பிற்பட்டோர் ஆணைய காலக்கெடுவை ஆறு மாத காலம் நீட்டி இருப்பது தான் மிகுந்த அதிர்ச்சி இருக்கிறது என்றார்.

பின்னர் பல கட்சிகளில் பல பேர் குறுக்கிட்டு பேச ஆரம்பித்தார்கள். அவையே சூடு பிடித்தது. காரசாரமாக பேசியும் எல்லாவற்றிலும் பதில் கூறினார் ஜி கே மணி.

 

இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் : இந்த இட ஒதுக்கீடு குறித்து பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அவர்கள் இந்த சட்டமன்றத்தில் பலமுறை பேசி இருக்கிறார். என்னிடத்தில் ஜி.கே.மணி அவர்கள் நேரில் பலமுறை சொல்லியிருக்கறார். 

அதற்கான காரணங்களை விளக்கி  கூறி இருக்கிறேன். நீண்ட விளக்கம் சொல்லி இது நீதிமன்ற பிரச்சனை இருக்கிறது. நீதிமன்றத்தில் குறை இல்லாமல் சரியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

எனவே இனி அரசு 10.5% விழுக்காடு இட ஒதுக்கீடு கட்டாயம் நிறைவேற்றப்படும். தாமதமாவதற்கான காரணங்கள் எல்லாம் சொல்லி கட்டாயம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

ஜி.கே.மணி தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள விளக்கத்தின் அடிப்படியில் மேற்க்காணும் செய்தி தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK MLA GK Mani Assembly Speech for Vanniyar Reservation 23


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->