#Breaking : அனைத்து சமூகமும் வாழ வேண்டும்., அதற்கான நடவடிக்கையை மருத்துவர் இராமதாஸ் எடுப்பார் - பாமக தலைவர் ஜி கே மணி.!  - Seithipunal
Seithipunal


கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக வன்னிய மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முழு முதல் காரணமாக இருந்த இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவருமான மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு, பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து இணையவழியில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்து, இன்று (31.07.2021) பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, மருத்துவர் இராமதாஸ் அவர்களை வாழ்த்திய திரைப்பட பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள், இரண்டு பாடல்களை பாடி அனைவரையும் நெகிழ செய்தார். இந்த பாடலை மெய் சிலிர்த்து பாட்டாளிகள் கேட்க, மருத்துவர் அன்புமணி இராமதாசும் உடனடியாக புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த பாராட்டு விழாவில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி, கே மணி அவர்கள், "கடந்த 1980 ஆம் வருடம் மருத்துவர் அய்யா என்ன நோக்கத்திற்காக வன்னியர் சங்கம், பாமகவை தோற்றுவித்தாரோ அதன் முதற்கட்ட வெற்றியாக 10.5 விழுக்காடு கிடைத்துள்ளது. 

மருத்துவர் அய்யாவின் நோக்கம் 100 விழுக்காடு அனைத்து சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பது தான். அதற்காக மருத்துவர் அய்யா தொடர்ந்து போராடுவர். நாமும் போராடுவோம். 

கடந்த ஆட்சி மற்றும் தற்போதைய இந்த ஆட்சியில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக பல விமர்சனங்கள், கேள்விகள் எழுந்தது. இந்த தடைகளை உடைத்தவர் மருத்துவர் அய்யா தான். 

கிராமங்கள் தோறும் இணையவழியில் பாராட்டு கூட்டம் விரைவில் திட்டமிட்டு நடத்தப்படும். மருத்துவர் அய்யாவால் வன்னியர் சமூகம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. 

இந்த சமுதாயம் வாழ வேண்டும், இதனைப் போன்று அனைத்து சமூகமும் வாழ வேண்டும். அதற்கான நடவடிக்கையை மருத்துவர் அய்யா எடுப்பார். இந்த வெற்றி முதல் வெற்றி மட்டுமே. இன்னும் பல வெற்றிகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது." என்று ஜி கே மணி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK LEADER G K MANI SAY ABOUT ALL COMMUNITY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->