கொலை செய்யப்பட்ட பாமக பெண் நிர்வாகி.! அரக்கோணம் அருகே உண்டான பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


அரக்கோணம் அருகே சின்னகைனூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதல பிரதாபன் என்பவருக்கு நிர்மலா (வயது 45) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கணவர் இறந்ததன் காரணமாக தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். 

murder, seithipunal

இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்த நிர்மலாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பட்டம்மாள் ஓடி வந்து தடுக்க அவரை கட்டையால் தாக்கி கீழே தள்ள அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அம்மிக்கல்லை தூக்கி நிர்மலா தலையில் போட அப்பொழுதே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

nirmala,seihtipunal

பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.கதவு திறந்து கிடந்ததை கண்டு இன்று காலை அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்க்க இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த நிர்மலாவின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மயங்கி கிடந்த பட்டம்மாளை கொண்டு சென்று மருத்துவமையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தற்பொழுது அவர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் கண் திறந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் பாமகவின் மகளிர் அணி பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா,? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என அரக்கோணம் டவுன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk girl death in arakkonam


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->