பெண்களுக்கு பாதுகாப்பில்லா திமுக ஆட்சி... சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட அதிமுக ஆட்சி - மருத்துவர் அன்புமணி.!  - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சியில் பெண்கள் வீட்டினை விட்டு வெளியே வர முடியவில்லை. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குமாரபாளையத்தில் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் தமிழக மின்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இதன்போது, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " அதிமுக சட்டமன்ற வேட்பாளர் தமிழக மின்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அவர்களை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். தங்கமணி வெற்றியடைந்தால், மீண்டும் தமிழக முதல்வராக விவசாயி எடப்பாடி பழனிச்சாமி பதவிவகிப்பார். 

அதிமுக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள், வாக்காள சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். 

இந்த தேர்தல் நமக்கு மிக முக்கிய தேர்தல். 70 வருடத்திற்கு பின்னர் தமிழகத்தில் விவசாயியாக தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ளார். நம்மில் ஒருவர் தமிழக முதல்வர். அவர் மீண்டும் வெற்றியடைய வேண்டும். எதிரணியில் இருப்பது மு.க ஸ்டாலின். இந்த தேர்தல் விவசாயிக்கும், முதலாளிக்கும் நடைபெறும் தேர்தல். இதில் விவசாயி கட்டாயம் வெற்றிபெற வேண்டும். தமிழக மக்கள், விவசாய பெருமக்கள் தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். 

திமுக ஆட்சியில் பெண்கள் வீட்டினை விட்டு வெளியே வர முடியவில்லை. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு நிம்மதி மட்டுமல்லாது, பல திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500 திட்டம், வருடத்திற்கு 6 சிலிண்டர் திட்டம் என்று பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இந்த திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கது. கொரோனா காரணமாக உலகம் முழுவதும் மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். விவசாய கடன், நகைக்கடன் போன்றவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மு.க ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் தான். ஜனநாயக ஆட்சியில் மக்கள் முதல்வராக வரலாம். நமது ஆட்சி மக்களாட்சி. திமுக என்றாலே குடும்பம். குடும்ப ஆட்சி " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Speech about Woman Safety on AIADMK Govt 24 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->