2 பேர் மட்டுமே இருந்த கட்சி பாஜக.! தொண்டர்கள் மத்தியில் மோடி உருக்கம்.!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அதுபோல சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் ஏ.எம்.ஐ.எம் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், டெல்லியில் இருக்கும் பாஜக தலைமையகத்ற்கு வந்த பிரதமர் மோடி தொண்டர்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "பீகார் தேர்தலில் இந்த வெற்றியை கொடுத்த மக்களுக்கு என்னுடைய நன்றிகள். கொரோனா வைரஸ் பரவுகின்ற நேரத்தில் தேர்தலை நடத்தி உலகத்திற்கே இந்தியா தனது சக்தியைக் காட்டி இருக்கின்றது. அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையம் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். 

வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்கின்ற தீர்மானத்தை மக்கள் எடுத்து இருக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக வேலை செய்யுங்கள். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாதவர்களுக்கு தேர்தலில் வாக்குகள் கிடைக்கவில்லை. 

ஒரு காலத்தில் பாஜகவுக்கு இரண்டு உறுப்பினர்களும் இரண்டு அறைகளும் மட்டுமே இருந்தது. தற்போது கட்சி தேசம் முழுதும் விரிந்து ஒவ்வொருவருடைய இதயத்தையும் வென்று வருகிறது. குடும்பத்திற்கான கட்சிதான் காங்கிரஸ் ஜனநாயகத்தில் வாரிசு அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi speech about bihar election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal