தவறாக வழி நடத்தும் சிலர்! விவசாயிகளுக்கு உறுதி அளித்த பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தற்போது நிறைவேறியுள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வேளாண்மை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், "இந்திய வேளாண்மைத் துறை வரலாற்றில் இது திருப்புமுனை தருணமாக அமைந்துள்ளது. வேளாண்மை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்குப் பாராட்டுகள். இதன் காரணமாக வேளாண்மைத் துறையில் முழுமையான மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. இந்திய விவசாயிகள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டனர். அதில் இருந்து விவசாயிகள் விடுதலை பெறுவார்கள்." துன்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று பீகாரில் 9 நெடு​ஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்றியுள்ளார். அதில், வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் சிலர் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை கொள்கை கண்டிப்பாக தொடரும் என விவசாயிகளிடம் உறுதி அளிக்கிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi promise to farmers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->