#BigBreaking : பிரதமர் மோடி சற்றுமுன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, நேற்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தார். மேலும் ஒரு சில கோரிக்கைகளையும் பிரதமர் மோடி வைத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் தடுப்பூசி தட்டுப்பாடு, ராஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு சம்பந்தமான புகார்கள், விவசாயிகளின் போராட்டம், முக்கியமாக பெட்ரோல்- டீசல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து, விவாதம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, 

அமைதியான முறையில், ஆக்கபூர்வமாக பாராளுமன்ற விவாதங்களை நடத்தவேண்டும். எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் எவ்வளவு கடினமான கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், அமைதியான முறையில் அவைகளில் ஆலோசனைகள் மற்றும் விவாதங்களை நடத்த வேண்டும்.

எதிர்க் கட்சிகள் அனைவரும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாடாளுமன்றம் சரியான முறையில் செயலாற்ற உதவி செய்ய வேண்டும்." என்று பிரதமர் நரேந்திர மோடி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi press meet july


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->