"மாற்றத்தைத் தொடங்கட்டும், மோடியுடன் விக்சித் கேரளம்!": கேரளத் தேர்தல் களத்தில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பிரசாரம்!
pm modi kerala election campaign
கேரளச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட தேர்தல் பிரசார மாநாட்டை மார்ச் 11-ஆம் தேதி கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் பயணத்திட்டம் (மார்ச் 11):
வருகை: காலை 11:30 மணிக்குக் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார்.
முதல் நிகழ்வு: அகில கேரள தீவர சபையின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பு.
அரசு விழா: கலூர் ஜவஹர்லால் நேரு சர்வதேச திடலில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
மாநாடு: மதியம் 1:00 மணி முதல் 1:30 மணி வரை என்.டி.ஏ (NDA) பிரசார மாநாட்டில் உரையாற்றுகிறார்.
அரசியல் முக்கியத்துவம்:
மாஸ் ரோடுஷோ: திடலின் நுழைவாயிலில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட சாலை அணிவகுப்பு நடைபெற உள்ளது.
கூட்டணி விரிவாக்கம்: 12 முக்கிய கட்சிகள் இணைந்துள்ள புதிய என்.டி.ஏ கூட்டணியின் முதல் அதிகாரப்பூர்வ மாநாடு இதுவாகும்.
முக்கிய தலைவர்கள்: பாஜாக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், ட்வென்டி20 தலைவர் சாபு எம். ஜேக்கப், பிடிஜேஎஸ் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பிரதமரின் இந்த வருகை கேரள அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும், மாநில வளர்ச்சிக்கான சிறப்பு அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்றும் பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
pm modi kerala election campaign