மீண்டும் மாநிலத்திற்கு எண்ட்ரீ கொடுக்கும் பிரதமர் மோடி.! இரண்டு நாள் பயணம்.!  - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி குஜராத்திற்கு சென்றுள்ளார். அஹமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வது அவசியம் என்று பிரதமர் மோடி கருதுகிறார். 

எனவே அடிக்கடி தற்போது குஜராத் மாநிலத்திற்கு சென்று வருகின்றார். இந்த நிலையில், குஜராத்திற்கு வந்திருக்கும் பிரதமர் மோடி முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத்தில் இருக்கும் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று சமண மத துறவியான ராஜ் சந்திரனின் உருவம் பொறித்த நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிடுகின்றார். 

ராஜ் சந்திரா மகாத்மாகாந்தியின் ஆன்மீக குருவாக கருதப்படுகின்றார். அதன்பின்னர் ராஜ்கோட் செல்கின்ற பிரதமர் மோடி 18,000 மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi arrival gujarat for 2 days


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal