தனித்து விடப்பட்ட கேரளா.! பிரதமர் மோடியிடம் உதவிக்கு ஓடிய கேரளா முதல்வர் பினராயி விஜயன்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் கேரளா. இடையில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொரோனா நோய் தொற்றுகளை அம்மாநில அரசு கட்டுப்படுத்தியது. இருப்பினும் தற்போது மற்ற மாநிலங்களை காட்டிலும் அம்மாநிலத்தில் நோய்த்தொற்றுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

இதில், தமிழகத்தில் இருந்து கொண்டே தமிழகத்தை விட்டுக்கொடுத்து கேரளாவை பாருங்கள் என்று கேரளாவை போற்றி புகழ்ந்து கொண்டு இருந்தது. தமிழக அரசு கேரளாவை பார்க்காமல் கொரோனா பரவலை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் கேரளா மாநிலத்தின் நிலை தற்போது பரிதமாக உள்ளது. கொரோனா பரவல் முன்பை விட தற்போது தீயாய் பரவி வருகிறது.

இதன் காரணமாக கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கர்நாடக மாநில அரசு நேற்று முன்தினம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் இரு மாநிலங்களுக்கு இடையே இடையிலான 4 சாலைகளை தவிர மற்ற அனைத்து சாலைகளும் மூடப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நான்கு சாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழ் காட்டிய பின்பே கர்நாடக மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் பிரதமர் மோடி நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "மாநில எல்லைகளை கர்நாடக அரசு மூடி உள்ளதால், கேரளாவில் இருந்து கர்நாடகா செல்லும் மாணவர்கள், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சரக்கு வாகனங்கள் போக்குவரத்து தற்போது தடைபட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்தை தடை விதிப்பது மத்திய அரசின் கொரோனா அறிவுறுத்தலுக்கு எதிராக உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு கேரளாவில் இருந்து கர்நாடகா செல்லும் மக்களின் கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள்., கேரளாவை பாக்காத பிறந்த தமிழ் மண்ணை பார் என்று நெட்டிசன்கள் தமிழகத்தை விட்டுக்கொடுத்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pinarayi Vijayan write letter to PM Modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->