வாக்காளர் பட்டியல் குறித்து வெளியான தனிப்பட்ட தகவல்கள்! SIR பணியைச் சூழ்ந்த அதிரடி சர்ச்சைகள்..!
Personal information about voter list leaked Dramatic controversies surrounding SIR project
பீகார் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தொடங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்தப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டு ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் முதல் வாரம் ஆரம்பித்த இந்த செயல்பாட்டில், வீடு வீடாக பூத் லெவல் அலுவலர்கள் வாக்காளர் படிவங்களை வழங்கினர்.

ஆனால், டிசம்பர் 4 என்று நிர்ணயிக்கப்பட்ட கடும் காலக்கெடு காரணமாக பணியாளர்கள் மீது மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டது. மனஅழுத்தம், பணிச்சுமை, தொடர்ச்சியான நெருக்கடி ஆகியவற்றால் பல இடங்களில் அரசுப் பணியாளர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அதிர்ச்சியையும் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தின.
இந்த சூழ்நிலையில், எஸ்.ஐ.ஆர். செயல்பாட்டுக்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க டிசம்பர் 11 வரை அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 16 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
இறுதி பட்டியல் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்படும்.இதற்கிடையில், எஸ்.ஐ.ஆர். பணியில் ஏற்பட்ட கலக்கம் காரணமாக நாடு முழுவதும் 40 பேர் பலியானார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகத் ராய் உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே நேரத்தில், வாக்காளர் படிவங்களில் உள்ள ஆதார் எண்கள் மற்றும் செல்போன் எண்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக பொதுமக்களுக்கு புதிய அச்சம் ஏற்பட்டுள்ளது. காரணம், பூத் லெவல் அலுவலர்கள் ஒருமுறை மட்டுமே வீடுகளுக்கு படிவம் வழங்கியதால், அதை பெறவும் திருப்பி தரவும் மக்கள் தாமாகவே முகாம்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மிக முக்கியமான குற்றச்சாட்டு என்ன என்றால்,"படிவங்களை சேகரிப்பது மற்றும் ஆன்லைனில் பதிவேற்றுவது அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளின் கைக்குச் சென்றுவிட்டது என்பதே. இதனால் வாக்காளர்களின் ஆதார்–செல்போன் எண்கள் அவர்கள் வசம் கசிந்து விட்டதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதன் விளைவாக, தொகுதி வாரியாக வாக்காளர்களின் அனைத்து செல்போன் எண்களும் அரசியல் கட்சிகளின் கையில்!
சில இடங்களில் “கணக்கெடுப்பு படிவத்தில் உங்கள் தகவல்கள் தேவை” என்று அறியாத நபர்கள் போன் செய்யும் நிலை!
நீங்கள் பூத் அலுவலரா?” என்ற கேள்விக்கு "இல்லை" என்று பதில் அளித்துப் பிறகு தங்களை யார் என்று சொல்வதையே தவிர்க்கும் சந்தேகத்துக்கிடமான நபர்கள்!
இதனால், வாக்காளர் விவரங்கள் தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடும் என்ற அச்சத்தில் மக்கள் தேர்தல் ஆணையம் இதற்கு உடனடி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Personal information about voter list leaked Dramatic controversies surrounding SIR project