ஒரே இடத்தில் கொத்தாக 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம்.! அதிர்ச்சியில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நாடாளுமன்ற ஊழியர்கள் 1409 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா நோய்த்தொற்று பரிசோதனையில், 402 பேருக்கு தற்போது நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து நோய்த்தொற்று உறுதியானவர்கள் உறுதியான ஊழியர்களின் மாதிரிகளை ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த பல்வேறு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாராளுமன்றத்திற்கு வெளியே பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

பாராளுமன்ற ஊழியர்கள் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், மீதமுள்ள பணியாளர்களுக்கு  வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஊழியர்களின் வருகைக்கான பயோமெட்ரிக் பதிவில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliament 402 staff affected corona


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->