ஓபிஎஸ் சொன்ன ஒருவார்த்தை! உச்சகட்ட கொந்தளிப்பில் அதிமுகவினர்! ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த சபாநாயகர் அப்பாவு! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டபேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேறுபட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்று மீண்டும் மசோதா நிறைவேற்றபட்டுள்ளது.

முன்னதாக மசோதா குறித்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய முன்னாள் முதலவர் ஓபிஎஸ், "அதிமுக சார்பில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் கூறிய "அதிமுக சார்பில்" என்ற வார்த்தைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் தொடர் முழக்கமீட்டனர்.

தொடர்ந்து அவையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "ஓபிஎஸ் பேசுவது குழப்பத்தை உண்டு செய்வது போல் உள்ளது; பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அதுதான் எதிர்க்கட்சி" தெரிவித்தார்.

அதற்க்கு விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, "ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ நான் சொல்லவில்லை. முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில், அவர் கோரும் போது ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கினோம்.

"மூத்த உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில்தான் ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கினேன். "பிரதான எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை" என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS vs EPS TN Assembly march 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->