இபிஎஸ் உத்தரவு குறித்த கேள்வி - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


நேற்று ஓ பன்னீர்செல்வம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியின் ஆலோசகராக நியமித்து அறிவித்திருந்தார்.

ஓபிஎஸ் அறிவித்த சில நிமிடங்களில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டார்.

சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி இராமச்சந்திரன் இல்லத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தெரிவித்தாவது, "எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் பயணித்த மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அவரின் அனுபவங்களை ஆலோசனைகளாக நான் பெற்று கொண்டேன்.

பண்ருட்டி இராமச்சந்திரன் கருத்தை மக்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் (அண்மையில் எடப்பாடி பழனிசாமி குறித்து பண்ருட்டி இராமச்சந்திரன் கூறிய கருத்துக்களை தான் ஓபிஎஸ் குறிப்பிட்டு சொலிக்கிறார்).

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள், ஜெயலலிதாவுடன் பயணித்தவர்களை விரைவில் சந்திக்க உள்ளேன். பொறுத்திருந்து பாருங்கள்" என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து ஓபிஎஸ், "அதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்" என்று சொல்லியவர் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டார் ஓபிஎஸ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS say about EPS Announce sep


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->