ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடி திட்டம்..? அனைத்திற்கும் தடை.. கலக்கத்தில் இபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் கடும் அமளியுடன் முடிந்தது. இந்த கூட்டத்தின் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பொதுக்கூட்டத்தில் உரிய மரியாதை கிடைக்காததால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே ஒருங்கிணைப்பாளர் பதவியை காலாவதி ஆகி விட்டதாக எடப்பாடிபழனிசாமி தரப்பு கூறிவரும் நிலையில், அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டு, புதிய பொருளாளராக கேபி முனுசாமியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓ பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டு வர தடை விதிக்க கோரியும் புதிய மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops may be new case for admk posting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->