எடப்பாடி பழனிசாமியின் கோட்டையில் நுழைந்த ஓபிஎஸ் - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம்  இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாக வசதியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் கள்ளக்குறிச்சி வடக்கு என இரண்டு மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

1. திரு. க. வேங்கையன் அவர்கள் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிகள்)

2. திரு. D.N. பாஸ்கர் அவர்கள் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்.
(ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிகள்)

இதேபோன்று, சேலம் மாநகர், சேலம் புறநகர் எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு, சேலம் மாநகர், சேலம் புறநகர் மேற்கு, சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மத்திய மற்றும் சேலம் புறநகர் வடக்கு என ஐந்து மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

1. திரு. N. தினேஷ் அவர்கள், சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர். (சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிகள்)

2. திரு. எடப்பாடி P.A. இராஜேந்திரன் அவர்கள், சேலம் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர். (எடப்பாடி, சங்ககிரி சட்டமன்றத் தொகுதிகள்)

3. திரு.A.பெரியசாமி அவர்கள், சேலம் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர். (ஆத்தூர், கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிகள்)

4. திரு. M. ஜெய்சங்கர் அவர்கள், சேலம் புறநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர். (வீரபாண்டி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிகள்)

5. திரு. N. ராஜ்குமார் அவர்கள், சேலம் புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர். (மேட்டூர், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிகள்)

மேலும், ஓமலூர் சட்டமன்றத் தொகுதி அமைப்பரளராக திரு.A.மணிகண்டன் (எ) ராஜ்குமார் அவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்."

என்று அந்த அறிவிப்பில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS announce edappadi and salem area


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->