கர்நாடகாவில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் - சீமான் - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேகதாது அணை கட்டுவதாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் கூறியுள்ளதால் கர்நாடகாவில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கர்நாடக தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கர்நாடகாவில் இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் செய்து வந்த நிலையில் தற்போது கர்நாடக மக்கள் மாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK seeman speech about Karnataka assembly election


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->