நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடையாதா? - நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. நாட்டை ஆளும் பாஜகவை வீழ்த்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. 

மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். இதற்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகளை பெற்று 3-வது பெரிய கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி, இந்த முறை 50 லட்சம் வாக்குகள் பெறும் என்று கணிக்கப்படுகிறது. 

இதனால், அந்தக் கட்சியின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக, தேர்தலில் போட்டியிடாத Bharatiya Praja Aikyata Party-க்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சியினர் குமுறுகின்றனர். அதுவும் தமிழகத்திலும் இந்தக்கட்சி இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK party vivasayi symbol reserved another party


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->