திமுக 2.0 அல்ல… ஜீரோ!’ – ஸ்டாலினை சரமாரியாக தாக்கிய எடப்பாடி பழனிசாமியின் கடும் அரசியல் சவால்...!
Not DMK 2point0 but Zero Edappadi Palaniswami fierce political challenge launching scathing attack Stalin
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கடும் அரசியல் அறிக்கை, தமிழக அரசியல் அரங்கையே சலசலப்பாக்கியுள்ளது.
வழக்கம்போல் கிண்டலும் குத்தும் கலந்த வார்த்தைகளால் முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து தாக்கிய அவர், “ஆட்சியில் சாதனை செய்யாமல் ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல்தான் நடக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

தேர்தல் நேரத்தில் திமுக அளித்த 525 வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும், பெயர் மாற்றங்களும் விளம்பர அரசியலும் மட்டுமே நடக்கிறது என்றும் அவர் சாடினார்.
மத்திய அரசுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தத் தெரியாத திறனற்ற நிர்வாகம் காரணமாகவே மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் தாமதமாகியுள்ளன என்றும், அதற்குப் பதிலாக “நிதி தரவில்லை” என்ற காரணத்தை சொல்லி மக்களை ஏமாற்றும் நாடகம் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு கூட முழுமையான அறிக்கை தரத் தவறிய அரசு, தன் இயலாமையை மறைக்க மத்திய அரசை குறைகூறுகிறது என்றார்.
மேலும், “மக்களின் காதில் காகிதப் பூ சுற்றும் வாக்குறுதிகள் போதும்; தரையில் இறங்கி செயல் காட்ட வேண்டும்” எனக் கூறிய அவர், தற்போதைய ஆட்சி ‘விளம்பர மேக்கப் அரசியல்’ மட்டுமே செய்து வருவதாக விமர்சித்தார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்துவது ஸ்டாலினின் பலவீனத்தை காட்டுகிறது என்றும், அரசியல் தரமும் நாகரிகமும் காக்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்தார்.
இறுதியாக, “நாங்கள் சாதனைகளை வைத்து மக்களை சந்திப்போம்; திமுக வெறும் வார்த்தைகளோடு வரட்டும். மக்கள் தீர்ப்பில் 2.0 அல்ல, ‘ஜீரோ’தான் காத்திருக்கிறது” என அதிரடியாக சவால் விடுத்தார்.
English Summary
Not DMK 2point0 but Zero Edappadi Palaniswami fierce political challenge launching scathing attack Stalin