திமுக அரசு இப்படி செய்யலாமா? கொந்தளிப்பில் வடதமிழகம்.!  - Seithipunal
Seithipunal


குடியரசு நாள் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் வடதமிழ்நாட்டு விடுதலை வீரர்களை புறக்கணிக்கப்பட்டு இருப்பது, அந்த மாவட்டங்களை சேர்ந்த மக்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த பல தலைவர்களின் சிலைகள் இடம்பெற்று இருந்தன.

ஆனால், வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது அம்மாவட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

வடதமிழகத்தின் சுதந்திரபோராட்ட வீரர்கள் ஏராளம். அதில் குறிப்பிடும்படியாக,

நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், 
கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. 
ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். 
ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர் என சொல்லிக்கொண்டே போகலாம். 

இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல. தமிழக அரசு இவகர்களை புறக்கணித்து இருப்பது மிக தவறான செயல் என்ற பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தலைநகர் டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொந்தளித்த தமிழக அரசும், சில ஒன்றுக்கும் ஆகாத புரட்சி புண்ணாக்குகளும், வடதமிழகத்தின் தலைவர்களை புறக்கணிப்பது மட்டும் நியாயமா? என்று பதில் சொல்ல வேண்டும் என்று கட்டமாக பலரும் சமூகவலைத்தளம் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NORTH TAMILNADU FREEDOM FIGHTERS


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->