போட்டிக்கு போட்டி : மீத்தேன், கரும்பு காடு, போட்டோ ஷூட்., திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்து விடியோ வெளியிட்ட சின்ன பசங்க.! - Seithipunal
Seithipunal


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புலிகேசி மன்னர் போன்றும், மங்குனி அமைச்சர் போன்றும் வேடமிட்ட இரண்டு குழந்தைகள் பாரத பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசு குறித்தும் கேலி, கிண்டலாகப் பேசிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சிக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. மேலும், மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்கள் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக மற்றும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிலர் ஒரு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எடுக்கப்பட்ட காணொளி என்று தெரிகிறது.

இந்த காணொளியில் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான அந்த காணொளிக்கு போட்டியாக தற்போது இந்த காணொளி ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new video viral against mk stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->