லவ் ஜிகாத்தை தடுக்க கடும் சட்டம்., அதிரடியாக அறிவித்த முதலமைச்சர்! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் லவ் ஜகாத்தை தடுக்க கடும் சட்டம் கொண்டு வரப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ அருகே உள்ள சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு நேற்று அம்மாநில முதல்வர் ஆதித்தியநாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "நம் மாநிலத்தில் இன்று பெண்களை பாதுகாப்புக்கும், அவர்களுக்கு எதிராக நடக்கும் லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் சட்டம் கொண்டுவரப்படும். எங்கள்  சகோதரிகளின் அடையாளத்தையும், பெருமையையும், மாண்பையும் குறைக்கும் வகையில் செயல்படுவதற்கு எச்சரிக்கை விடுகிறேன்.

தொடர்ந்து நீங்கள் எங்கள் சகோதரிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு செய்து வருகிறீர்கள். இது இப்படியே தொடர்ந்தால் உங்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்த வேண்டியிருக்கும்." என்று கடும் கோபத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் லவ் ஜிகாத் செய்பவர்களுக்கு எதிராக தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new law come in utra predesh


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal