மக்களின் பிரதிநிதியாக புதிய பயணம்...! - சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வாக உதயநிதி ஸ்டாலின் பதவிப் பிரமாணம்...!
new journey representative people Udhayanidhi Stalin takes oath Chepauk MLA
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்று ஆட்சிப் பொறுப்பை கையகப்படுத்தினார். பதவியேற்ற உடனேயே மக்கள் நலனை முன்னிறுத்திய மூன்று முக்கிய அறிவிப்புகளில் அவர் கையெழுத்திட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைத்தல், போதைப்பொருள் ஒழிப்பிற்கென தனிப்படை உருவாக்குதல் ஆகிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஒப்புதல் வழங்கினார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவை இன்று காலை உற்சாகமான சூழ்நிலையில் கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார்.
சட்டப்பேரவை தொடங்கியவுடன் முதலமைச்சர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். “தமிழக மக்களின் நலனுக்காக தன்னையே ஓர் இயந்திரமாக மாற்றிக்கொண்ட தலைவரை வணங்குகிறேன்” என அவர் புகழாரம் சூட்டியதும் அவையில் கவனம் திரும்பியது.
இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றிகரமாக களமிறங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
அவரைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பிரபு உள்ளிட்டோர் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், போடி தொகுதியில் மக்கள் ஆதரவை பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
English Summary
new journey representative people Udhayanidhi Stalin takes oath Chepauk MLA