முல்லை பெரியாறு அணை உடைகிறதா? காவல்நிலையத்தில் புகார் அளித்த விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெறப்படுகிறது. முல்லை பெரியாறு அணையில் பேபி அணையை பலப்படுத்திய பின்னர் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. 

தற்போது அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்த நிலையில் கேரள பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஒருவர் அணை உடைந்து கேரளா தண்ணீரில் மூழ்குவது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை தயாரித்து பரப்பி வருகிறார். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, 

கேரளாவில் முல்லை பெரியாறு அணையை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர். மேலும் சிலர் தாங்கள் பிரபலமாவதற்கு இது போன்று வதந்திகளை பரப்பி வருகின்றனர். 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்துள்ளது.

இதன் பிறகு பலமுறை 142 வரை தண்ணீர் தேக்கப்பட்டு அணையின் பலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இருப்பினும் சிலர் கேரள மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதையும், வதந்திகளை பரப்புவதையும் தொடர்ந்து வருகின்றனர். இதனால் காவல்நிலையங்களில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்". என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mullai Periyaru dam issue farmers complaint


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->