தீப்பொறி இப்ப காட்டுத் தீயாகி இருக்கிறது.! மகிழ்ச்சியில் கனிமொழி! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெற்றிமாறன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஹிந்தி தெரியாததால் தான் அவமானம் பட்டதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு ஆதரவாக, தமிழ் திரைப் பிரபலங்கள் இந்தி மொழிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் களை அணிந்து, சமூகவலைதளங்களில் "இந்தி தெரியாது போடா" என்ற ஹேஷ்டேக்-யை ட்ரண்ட் செய்து வருகின்றனர். 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா I AM A தமிழ்பேசும் INDIAN என்ற வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து, சமூகத்தில் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி தமிழ்பேசும் இந்தியன் ஹிந்தி தெரியாது போன்ற வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்டை அணிந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ஹேஷ்டேக் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது.  இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல. #ஹிந்தி_தெரியாது_போடா" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp kanimozhi tweet about hindi theriyathu poda


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->