கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி!  முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை ஆறு தொகுதிகளில் வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி காங்கிரஸ் கட்சி நான்கு இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் முன்னிலை நிலவரத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி 129 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக 63 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 133 இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளதால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதியாகி உள்ளது.

இந்தியாவின் தென் மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் ஆட்சி செய்வதற்கு உண்டான சூழல் உள்ள ஒரே மாநிலம் கர்நாடகா, தற்போது அந்த மாநிலத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளதால், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. 

இந்த நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, பாஜக அல்லாத கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைக்க வேண்டும். கர்நாடக மாநில தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin Wish To Karnataka Congress


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->