வரும் சட்டமன்ற தேர்தலில் களத்தில் இறங்கும் முக அழகிரி.. கட்சியில் இணைவது குறித்து பரபரப்பு பேட்டி.!!
mk alagiri press meet on dec 01
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதனிடையே கருணாநிதியின் மூத்த மகன் மு க அழகிரி மீண்டும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்ததை அடுத்து, அவரால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கலக்கத்தில் திமுகவினர் உள்ளனர்.
மு க அழகிரியை எப்படியாவது பாஜகவில் இணைக்க வேண்டும் என பாஜக தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, முக அழகிரி பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என பாஜக தமிழக தலைவர் எல். முருகன் கூறினார். அது திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முக அழகிரி மற்றும் முக ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவர் இந்த பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது. இருவருக்கும் இடையே சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் முக அழகிரி திமுகவில் இணைய அனுமதிக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில், மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும். பாஜகவில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அழகிரி, அனைத்தும் வதந்திகள்.
மேலும், திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப் போவதாகவும், விரைவில் திமுகவில் இணையும் போவதாகவும் தகவல் வெளியாவதாக செய்தியாளர் கேள்விக்கு, முக அழகிரி இது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பேன் மேலும் புதிய கட்சி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் தலைவர்களுடன் ஆதரவாளர்களுடன் முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
mk alagiri press meet on dec 01