தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்.? அமைச்சர் வெளியிட்ட தகவல்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் ஆர் எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க இன்று கோவை மாவட்டத்தில் 2,800 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. மேலும், 21 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்க 100 வார்டுகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல பேரூராட்சி பகுதியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கருத்துக்கு முதலமைச்சர் வரக்கூடிய காலத்தில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பார். அதன்படி அரசு செயல்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister senthil balaji says about tasmac


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->