மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசினால் நாங்க பொறுப்பா?!! அமைச்சர் ரகுபதியின் சர்ச்சை பேச்சு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ரகுபதி "அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என நினைத்தால் நிச்சயமாக அது நிறைவேறாது. சட்டம் ஒழுங்கு பேணிக் காப்பதில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுப்பது போல வேறு யாரும் நடவடிக்கை எடுத்ததில்லை. ஆளுநர் மாளிகைக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக எடுத்துள்ளது. இதனால் எந்த சட்டம் ஒழுங்கும் கெட்டுவிடவில்லை.

அந்த தனி நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவருக்கு எந்தவித பின்புலமும் இருந்ததாக எங்களுக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை" என பதில் அளித்த போது சிறையிலேயே இதற்கான திட்டம் தீட்டப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் "கடந்த 8 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியே வந்துள்ளார். அவருடன் வேறு யாரும் தொடர்பு இருந்தார்களா? என்பது குறித்தான தகவல் எனக்கு கிடைக்கவில்லை. சிறையிலேயே சதி திட்டம் தீட்டப்பட்டதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. 

இதேபோன்று ஒரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற பேச்சும் இருந்து வருகிறது. அவர் எதன் அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசினார் என்பதெல்லாம் அவரை விசாரணை செய்த பிறகு தான் தெரிய வரும். 

நாங்கள் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தமிழகத்தில் நடைபெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வேறு யாரோ செய்ததாக தான் இருக்க வேண்டும். தமிழக அரசின் மீதும் தமிழக மக்கள் மீதும் வெறுப்புகளை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கின்ற முதல் நபர் ஆளுநர் மட்டும் தான். 

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் போல அவர் மேடை தோறும் பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்கள் ஆட்சி செய்ய மாநிலத்தில் நாங்கள் பெட்ரோல் குண்டு வீச வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு கிடையாது. எனவே இது போன்ற சம்பவங்களுக்கு திமுகவோ, எங்கள் கூட்டணி கட்சிகளோ பொறுப்பு இல்லை. 

எங்கேயாவது ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசிட்டு போனா அதுக்கு நாங்க பொறுப்பாக முடியுமா? ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறுவதெல்லாம் தவறான தகவல். இது ஆளுநர் மாளிகைக்கு வெளியில் நடந்த சம்பவம். ரோட்டில் போற போக்கில் எவனாச்சும் தூக்கி போட்டு போனா அதுக்கு என்ன பண்ண முடியும்? ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் இந்த அரசு எந்த ஒரு சிறிய தவறும் செய்யாது. எதிரியாக இருந்தாலும் அவரை பாதுகாக்கின்ற தலைவராக தான் மு.க ஸ்டாலின் இருப்பார்" என பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Raghupathi controversial speech about petrol Bomb attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->