அமைச்சர் பெரியசாமி வழக்கு.. தேதியை குறித்தது உச்ச நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதனுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் முறைகேடாக வீடு ஒதுக்கியதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. 

இந்த வழக்கிலிருந்து ஐ.பெரியசாமியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஐ பெரியசாமி விடுப்பு விக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இதற்கு தடை விதிக்க வேண்டும் என ஐ பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் அவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் முறைகேடு வழக்கை விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. 

இதனை அடுத்து ஐ பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஐ பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister periyasami appeal case hearing on April8


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->