தம்பி பொறுப்பான ஜர்னலிஸ்டா நடந்துக்க., செய்தியாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் எல் முருகன்.! - Seithipunal
Seithipunal


தினந்தோறும் 4 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாணவரையும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதே மத்திய அரசின் நோக்கம் என்று, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்த தெரிவிக்கையில், "கிட்டதட்ட 90% மாணவர்கள் உக்ரேனில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார்கள். இந்திய மாணவர் மட்டுமல்ல, இந்தியாவின் கடைசி குடிமகன் உக்ரேனில் இருந்து மீட்பது நம்முடைய அரசாங்கத்தின் முக்கியமாக முதல் கடமையாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், உக்ரைனில் 20000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். அதில் 800 மாணவர்கள் மட்டுமே மத்திய அரசு மீட்டு வந்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.  இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் எல் முருகன்,

"தம்பி நீங்கள் ஒரு பொறுப்பான பத்திரிக்கையாளர் மறந்துவிடாதீர்கள்., ஒரு பொறுப்பான பத்திரிக்கையாளராக கேள்வி கேளுங்கள்., மத்திய அரசு நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் இந்தியர்களை உக்ரைனில் இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

நேற்று மட்டும் 3000 இந்திய மாணவர்களை உக்ரேனில் இருந்து மீட்டு வந்துள்ளோம். கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வந்து விட்டோம். ஆனால் நீங்கள் வெறும் 800 பேர் என்று தான் சொல்கிறீர்கள். ஒரு தவறான தகவலை கேள்வியாக என்னிடம் முன் வைத்துள்ளீர்கள். ஒரு பொறுப்பான பத்திரிகையாளராக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். 

இங்கு யாரும் இது போன்ற ஒரு கேள்வி கேட்பதில்லை., இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பதும் இல்லை., நீங்கள் ஒருவர் மட்டும் தான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறீர்கள். முதலில் நீங்கள் ஒரு பொறுப்பான பத்திரிக்கையாளராக நடந்து கொள்ளுங்கள். தவறான தகவலை தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்

இந்திய மாணவர்களை மீட்பதற்காக இங்கிருந்து 4 மூத்த மத்திய அமைச்சர்கள் சென்று உள்ளார்கள். அவர்களை மீட்பது தான் எங்கள் முதலில் முதல் கடமையாக இருந்து வருகிறது" என்று எல் முருகன் பதிலடி கொடுத்தார்.

மேலும் செய்தியாளர் ஒருவர், "உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசின் நடவடிக்கைகளை மீறியும் மாநில தமிழக அரசு ஒரு மூன்று பேரை நியமித்து உள்ளது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு எல் முருகன், "அவர்களை போய் கூப்பிட்டு வரச் சொல்லுங்கள்., போய் கூப்பிட்டு வர சொல்லுங்கள் அவர்களை., இந்திய மாணவர்களை சென்று அவர்களை அழைத்து வர சொல்லுங்கள். இதுவரை அவர்கள் எத்தனை பேரை அழைத்துவந்துள்ளார்கள்?" என்று பதில் கேள்வி எழுப்பி புன்முறுவலை பதிலடியாக கொடுத்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister l murugan say about ukraine issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->