சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பியதும் அதிமுகவை மீட்டு எடுப்பார் என கூறப்பட்ட நிலையில், சசிகலா தான் அரசியல் விட்டு விலகுவதாக அறிக்கை வெளியிட்டு, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். முன்னதாக சசிகலாவை அதிமுகவில் 100 சதவீதம்  இணைக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சசிகலா குறித்த கேள்விக்கு,, அவர் மீது எந்த வருத்தமும் இல்லை. தற்போது உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பு ஏற்றுக் கொண்டால், அவரை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ஜெயக்குமார் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், ஓ பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அவர் கூறியதன் மீது கருத்து சொல்ல இயலாது. ஆனால் கட்சி நிலைப்பாடு அடிப்படையில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நானும் அதே கருத்தை தான் கூறுகிறேன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jayakumar press meet about sasikala join admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->