தமிழகமே எதிர்பார்க்காத முடிவை எடுத்த வைகோ.! ஆனந்த தாண்டவம் ஆடும் அதிமுக.!! அதிர்ச்சியில் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


வரும் 17-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மேலும் அந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணி, தொகுதி, வேட்பாளர், பிரச்சாரம் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் தொகுதிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அக்கட்சின் சார்பாக அ.கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மதிமுகவின் மாநில பொருளாளர் ஆவார்.

முன்னதாக மதிமுகவிற்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட பம்பரம் சின்னம் தற்போது இல்லை. இதனால், வைகோ உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி, அந்த தொகுதியின் தொண்டர்களிடம் கருத்து  கேட்டுள்ளார்.

அப்போது, உதய சூரியன் சின்னத்தில் நிற்பதுதான் நமக்கு நல்லது. புதிய சின்னத்தில் நின்றால், அதிமுக கூட்டணியை வீழ்த்த முடியாது. என்று மதிமுக, திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த முடிவுக்கு மதிமுகவின் அவை தலைவர் திருப்பூர் துரைசாமி ஒத்துக்கொள்ளவில்லை.

இதற்கு காரணம், உதய சூரியனில் நின்று போட்டியிடுவதற்கு, நாம் கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் இணைந்து விடலாம் என்று ஒரே அடியாக வார்த்தைகளால் அடித்துள்ளார். இதனால், வைகோ அவர்களும் தனி சின்னத்தில் போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

இது அதிமுக கூட்டணிக்கு மகிழ்ச்சியான செய்தி தான், காரணம் மதிமுக உதய சூரியன் சின்னத்தில் நின்றாள் கூட வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், சுயேச்சை சின்னத்தில் மதிமுக போட்டியிடுவதால் அந்த தொகுதி மக்களுக்கு குழப்பமாகி, தெரிந்த சின்னமான இரட்டை இலை சின்னத்தில் ஓட்டை செலுத்தி விடுவார்கள் என்று ஈரோடு அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனராம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK SIMPLE ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->