மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி திடீர் தர்ணா போராட்டம்! காரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுடன்  கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும்,  இந்தியன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், ஐஜேகே-வுக்கு ஒரு தொகுதியும் மதிமுகவிற்கு 1 மக்களைவை, 1 மாநிலங்களவை தொகுதியும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. திமுக வரும் பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதன் படி, மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி என்று அறிவிப்பட்டது. அவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டிடுவார் என்று வைகோ அறிவித்து இருந்தார். தற்போது அனைத்து கட்சியின் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். 

இந்நிலையில், மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை அதிகாரிகள் வேட்புமனு தாக்கல் செய்விடாமல் தாமதம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. நல்ல நேரம் முடிய உள்ள நிலையில், கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ளார். இதனால் கணேசமூர்த்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk election nomination


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->