தமிழக முதலமைச்சர் வாகனத்தில் தொங்கியபடி சென்ற மேயர் ப்ரியா.. இணையத்தில் வைரல்.! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய முதலமைச்சர் கான்வாயில் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் பேடி தொங்கியபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாண்டஸ் புயல் மற்றும் வெள்ளமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொட்டிவாக்கம் பாலவாக்கம் பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து காசிமேடு மீன் பிடி துறைமுகத்துக்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார். மேலும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் கே என் நேரு சேகர் பாபு பாலசுப்ரமணியன் உடன் காசிமேட்டிற்கு தனது காண்வாயில் சென்ற போது சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர்.  இந்த நிலையில் தற்போது இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayor Priya footboard in MK Stalin convoy vehicle


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->