பெண்களின் திருமண வயது 21 : மனதார வரவேற்கும் இஸ்லாமிய பெண்கள்.! எங்களுக்கு இந்த சட்டம் வேண்டும்.! - Seithipunal
Seithipunal


பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் 'குழந்தை திருமண சட்ட திருத்தம்' மசோதாவுக்கு, பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பெண்களின் திருமண வயது 21-ஆக உயர்த்த கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவை வரவேற்கிறோம். 

இந்தச் சட்டம் நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. அப்படி வழிவகை செய்யவில்லை என்றால் இந்தச் சட்டத்தினால் இஸ்லாமிய பெண்கள் பயனடைய முடியாமல் போய்விடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் தனிநபர் சட்டத்தால் முஸ்லிம் பெண்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு எதிராக, கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் தொடங்கப்பட்டது.  

இந்த அமைப்பு, முத்தலாக் நடைமுறைைய ஒழிக்க வேண்டும் தொடர்ச்சியாக போராடியது மட்டுமில்லாமல், கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனு ஒன்றையும் அளித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage age 21 law islam woman warm welcome


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->