உத்தரபிரதேச தேர்தலில் வென்றதற்கு பாஜக கொடுத்துள்ள பரிசுதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு-மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்வதற்கு மத்திய அரசிடம் எந்த தெளிவான திட்டமும் இல்லை. இந்த நெருக்கடிக்கு பாஜக தான் காரணம். உத்திர பிரதேச தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நாட்டு மக்களுக்கு பாஜக கொடுத்துள்ள பரிசுதான் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee urges all-party meeting to raise petrol and diesel prices


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->