#Breaking : கலைஞர் கருணாநிதி படத்தை அரசு விளம்பரங்களில் தடை செய்யக் கோரிய மனு.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதியின் படம் அரசு ஆவணங்களில் இடம்பெறுவதை தடை செய்யக்கோரிய மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரையில் எல்.எல்.பி படித்து வருகின்ற எஸ்.வெங்கடேஷ் (வயது 48) உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், "அரசு ஆவணங்கள், அரசு இணைய தளங்கள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் இடம்பெறுவதை தடை செய்ய வேண்டும்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 'முன்னாள் முதல்வர் புகைப்படத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு முரணானது.' என்று அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, மனு தாக்கல் செய்தவருக்கு உயர் நீதிமன்றம், ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras High court about kalainjar Karunanithi photos in govt document


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->