லக்கிம்பூர் கலவரம் : மத்திய இணை அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் மாதம், உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில், பாஜகவினரின் கார் உள்ளே புகுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்தனர்.

இதில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக உத்தரபிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5000 பக்க குற்றப்பத்திரிக்கையை லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இதில், மத்திய இணை அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, வன்முறை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே லக்னோ நீதிமன்றம் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakhimpur Kheri violence HC grants bail minister son


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->