மண்வெட்டியுடன் வேலை செய்யும் மத்திய அமைச்சரின் தாய்.! எங்கோ இல்லை., நம் தமிழகத்தில் தான்.! - Seithipunal
Seithipunal


பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன், அண்மையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இருப்பினும் அவருடைய தாய், தந்தை விவசாய பணி செய்து வாழ்வதுதான் எங்களுக்குப் பெருமை என்று தெரிவித்துள்ளனர். இது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை சாதாரண கவுன்சிலர் கூட, பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரில் உலா வருவது வழக்கமான ஒன்று, அவரின் தாய் முதல் ஒன்று விட்ட ஒன்று சகோதரர் வரை திடீர் பணக்காரர்களாக மாறுவதும் நாம் காணும் ஒரு நிகழ்வுதான். 

மன்னராட்சி காலம் முடிந்து குடியரசு நாடாக உள்ள இந்தியாவில், இன்று வரை குடும்ப அரசியல் மூலமாக மறைமுக மன்னராட்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது. தொண்டர்கள் அடிமைகளாக  வாழ்ந்து வருவதும்சோக கதை தான்.  

இந்த நிலையில், மகன் மத்திய அமைச்சராக ஆன பின்பும், தாய் -தந்தைகள் விவசாய வேலை செய்து உழைத்து வாழும் நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு மத்திய அமைச்சர் எல். முருகனின் தாய் எல்.வருதம்மாள், தந்தை எம்.லோகநாதன் அளித்துள்ள பேட்டியில், "எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பெரிய மகன் தான் முருகன், சின்ன மகன் ராமசாமி. எங்களுடைய இளையமகன் ராமசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

பெரிய மகன் முருகன் சட்டக்கல்வி படித்து சென்னையிலேயே இருந்து வந்தார். என்னுடைய மருமகள் பெயர் கலையரசி. எங்களுக்கு இரண்டு பேரன்கள் உள்ளார்கள். எங்களுடைய மருமகள் கலையரசி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

அடிக்கடி எனது மகன் எங்களை சென்னையில் வந்து தங்கும்படி கூறுவார். ஆனால், எங்களால் வீட்டுக்குள் அடைந்திருக்க முடியாது. அதனால், எங்களுடைய மருமகளையும் பேரன்களையும் அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு, நலம் விசாரிப்போம். நாங்கள் விவசாய தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகிறோம். அதுதான் எங்களுக்கு பிடித்திருக்கிறது. 

முன்பு எனது மகன் பாஜக மாநில தலைவராக பதவி வகித்தார், தற்போது மத்திய அமைச்சராகி உள்ளார். எங்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், கோனூர் கிராமத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் தாய் தந்தை வசித்து வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

l murugan parents say about life


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->