காங்கிரஸாருக்கு அதிரடி உத்தரவு.! பறந்த கடிதம்., விரைந்த தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


மாவட்டத்திற்கு ஒரு ஏரியை தூர்வார வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பஞ்சத்தில் தமிழக மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் வழங்குகிற திட்டங்களை நிறைவேற்றாத காரணத்தால் இன்றைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் தொலைநோக்குப் பார்வையோடு நிதி ஒதுக்கி, திட்டங்களைத் தீட்டி, தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த வகையில் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதிலிருந்து அதிமுக அரசு முழு தோல்வி அடைந்து விட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்க விரும்புகிற காங்கிரஸ் இத்தகைய குற்றச்சாட்டுகளை எழுப்புவதோடு நின்றுவிடாமல், ஆக்கப்பூர்வமான பணிகளின் மூலம் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ள விரும்புகிறது.

காந்தி நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறங்களை புணர் நிர்மாணம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் கிராம மக்கள் தங்களது சுய தேவைகளை நமக்கு நாமே செய்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் செயல்பாடுகளை வளர்த்தெடுத்தார். இத்தகைய பணியை மீண்டும் முன்னெடுக்க வேண்டியதை காங்கிரஸ் கட்சியினர் தங்களது கடமையாகக் கருத வேண்டும்.

kudimaramathu, seithipunal

இந்நிலையில், சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம், தேவந்தவாக்கம் கிராமத்தில் உள்ள சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாத நிலையில் இருந்தது. இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர் ரூபாய் 10 லட்சம் செலவில் தூர் வாரும் பணி திட்டமிடப்பட்டு, அதை தொடங்கி வைக்கிற நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் கே.ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் சட்டத்துறை தலைவர் கே.சந்திரமோகன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி. சிதம்பரம் ஆகியோர் ஒருங்கிணைத்து இப்பணிகளைச் செயல்படுத்தினர்.

காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்ட இந்தப் பணிக்கு அந்தப் பகுதி மக்களிடையே அமோக வரவேற்பு இருந்ததைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நிகழ்வுக்குப் பிறகு தமிழக அளவில் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு 72 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தங்கள் மாவட்டத்தில் ஏதாவது ஒரு குளத்தைத் தேர்வு செய்து தூர் வாருகிற பணியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒருநாளில் தூர்வாரும் பணியைச் சிறப்பாக நடத்திட வேண்டும். இந்தப் பணிகளை செய்வதன் மூலமாக அரசியல் கட்சி என்பது ஆக்கப்பூர்வமான சேவை மனப்பான்மையோடு செயல்பட முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் முழுஅளவு ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்", என, கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ks alagiri new announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->