அடுத்தடுத்த ஆடியோ ரிலீஸ்.. அதிமுக சீட்டுக்கு "ரூ.1 கோடி பேரம்".. கே.பி முனுசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


அதிமுக இணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடம் மாவட்ட செயலாளர் பதவிக்கு ரூ.1 கோடி பேரம் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அதிமுக இணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிகளுக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் கே.பி முனுசாமி அதிமுக நிர்வாகிகளிடம் பணம் பறிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் கே.பி முனுசாமியும் பேசியதாக  ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி 50 ரூபாய் தயாராக இருப்பதாகவும். மீதம் 50 ரூபாய் கூடிய விரைவில் தயார் செய்வதாகவும் பேசியிருந்தார்.

அதற்கு கே.பி முனுசாமி தனது மகனை அனுப்பி வைப்பதாக பதில் கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர் குளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள மற்றொரு ஆடியோவில் கே.பி முனுசாமியின் கார் ஓட்டுநரும் கிருஷ்ணமூர்த்தியும் பேசியுள்ளனர்.

அந்த ஆடியோவில் "கே.பி முனுசாமி இடம் பேசியதாகவும் பணம் பெற்றுக் கொள்ள தனது மகனை அனுப்புவதாகவும் கூறியுள்ளார். எப்பொழுது வருவார்கள்" என கார் ஓட்டுனரிடம் கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அதற்கு கே.பி முனுசாமியின் கார் ஓட்டுனர் "தற்பொழுது இங்க இல்லை என்றும் சென்னையில் இருக்கலாம்" என்றும் பேசியுள்ளார்.

மேலும் மதியம் வரை காத்திருந்துவிட்டு பிறகு கே.பி முனுசாமியின் மகனை கூப்பிடுங்கள் அவர் வேறு ஏதேனும் வேலையாக சென்னை வந்திருக்கலாம் என பேசி உள்ளார். மேலும் இருவரும் பேசிக் கொள்வது கே.பி முனுசாமிக்கு தெரிய வேண்டாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கார் டிரைவரிடம் பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KP Munusamy audio released by ops supporter kolathur krishnamurthy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->