'காலில் விழுந்த எடப்பாடி' 'கொல்லைப்புற ஆட்சி' - திமுகவிற்கு தாவிய கோவை செல்வராஜ் பேட்டி.!  - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து கோவை செல்வராஜ் விலகிய நிலையில் தற்போது ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து இருக்கிறார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், "கஷ்டப்படுகின்ற பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள் என்று பல்வேறு பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண்களும் கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வேலைக்கு செல்கின்றனர். 

அவர்களுக்கு அன்றாடம் ரூ.60 முதல் ரூ.70 வரை கட்டணம் மிச்சம் செய்யப்படுகிறது. இதனால், பெண்கள் மாதாமாதம் ரூ.1500 வரை சேமிக்க முடிகிறது. அவர்களது ஆதரவு ஸ்டாலினுக்கு எப்போதும் உண்டு. வியாபாரிகளும், பொதுமக்களும் அரசியல் தலையீடு இல்லாமல் எவ்வித பிரச்சனையும் இல்லாமல், மின்சார தட்டுப்பாடு இன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இதற்கு காரணம் அண்ணன் செந்தில் பாலாஜி தான். 100 யூனிட் இலவச மின்சார விநியோகத்தை திமுக அரசு நிறுத்தும் என்று தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆட்சியில் தங்கமணி அமைச்சராக இருந்தபோது ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார். 

ஆனால் தற்போது ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டு அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட முதல்வரை, காலில் விழுந்து கொள்ளை புறமாக ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க தகுதி இல்லை. 

அதிமுக கார்ப்பரேட் கம்பெனி போல் ஆகிவிட்டது. அதிமுக தொண்டர்கள் அந்த சாதி கட்சியை ஒழிக்க வேண்டும். கோவை மாவட்ட அதிமுகவில் இருந்து 5000 பேரை திமுகவில் இணைக்க இருக்கின்றோம். திமுகவின் ஆட்சி அமைய தொடர்ந்து செயல்படுவோம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai selvaraj damages eps image in press meet


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->