கோவை செல்வபிரபு வீடியோ வெளியிட்டு அதிமுகவிலிருந்து விலகல்..மீண்டும் பாஜகவுக்கு ஆதரவு.!! - Seithipunal
Seithipunal


2021 சட்டப் பேரவை தேர்தலில் ஒரே கூட்டணித்து அதிமுகவும் பாஜகவும் தற்போது இரண்டு அணிகளாக தனித்து களம் காண்கிறது. இது கட்சிகள் இடையே பிரச்சாரத்தில் கருத்து மோதல் ஆனது நிறைவு வருகிறது. கோவை மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும் பாஜக ஐடிவிங் மாநிலச் செயலாளர் செல்வபிரபு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இச்சம்பவம் பாஜகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், செல்வ பிரபு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தவறு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். வீடியோ காட்சிகளில் அவர் கூறியதாவது, புதிய பாஜக பொறுப்பாளர்களின் அழுத்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு நான் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தேன். மத்திய அமைச்சர் எல்.முருகன் மாநில தலைவராக இருக்கும்போதே ஐடி மாநில செயலாளர் இருந்தவன் நான்.

எல் முருகன் தாராபுரத்தில் போட்டியிடும் போது சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்தேன். கோவத்தில் தவறான முடிவை எடுத்து விட்டேன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய முடியாமல் நாள்தோறும் வேதனையில் உள்ளேன். அண்ணாமலை கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும். நான் இனி எந்த கட்சியிலும் இல்லை, எனக்கு எந்த பொறுப்பும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai selvaprabhu out to admk joined bjp


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->