கேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலை., எஸ்டிபிஐ கட்சி காரணம்., கொந்தளிக்கும் பாஜக.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சித்.  26 வயதாகும் இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தொண்டராக இருந்து வருகிறார். 

இன்று காலை 9 மணி அளவில் தனது மனைவியுடன். இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி விட்டு தப்பியது.

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அக்கம்பக்கத்தினர் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சஞ்சித் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நியூலையில்,  இந்திய சமூக ஜனநாயக கட்சியை (எஸ்டிபிஐ) சேர்ந்தவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று, பாஜக சந்தேகப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக தலைவர் ஹரிதாஸ் தெரிவிக்கையில், இந்திய ஜனநாயக கட்சியினர் நன்கு திட்டமிட்டு செய்த அரசியல் கொலை இது என்றும், ஆளும் கட்சியின் ஆதரவு அக்கட்சிக்கு கிடைத்துள்ளதால் இந்த கொலைவெறி தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பாஜக தலைவர் கே எம் ஹரிதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KERALA RSS MEMBER SANJITH MURDER


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->