#BREAKING:: கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள்.. "ஆளுநர்களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை".. கேரள முதல்வர் வரவேற்பு..!! - Seithipunal
Seithipunal


ஆளுநர்களின் நடவடிக்கை எதிரான கூட்டு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதத்திற்கு கேரள முதல்வர் பினராகி விஜயம் வரவேற்பு தெரிவித்துள்ளார். மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் குறித்த கால அளவிற்கு ஒப்புதல் வழங்க குடியரசு தலைவர் அறிவுரை வழங்கவும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல எதிர்க்கட்சிகளாலும் மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி ஆளும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்ததோடு டெல்லி சட்டப்பேரவையிலும் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரப் போவதாக உறுதியளித்திருந்தார்.

ஆளுநரின் அராஜகங்களுக்கு எதிராக தமிழக முதல்வர் கொண்டு வந்த இந்த தீ நாடு முழுவதும் பரவட்டும் என வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் ஆளுநர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி இருந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கேரள மாநில முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கேரள மாநிலத்திலும் இது போன்ற பிரச்சனைகள் இருந்து வருகிறது. கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் உள்ளது. சில மசோதாக்கள் ஒரு வருடங்களுக்கு மேலாக கிடப்பில் உள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலையில் ஆளுநர்களின் நடவடிக்கை எடுக்க எதிராக தமிழக அரசின் முயற்சிக்கு கேரளா அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்" என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala cm welcomes Joint action against governors


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->