உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக இதை செய்து தான் வெற்றி பெற்றது.. உண்மையை உளறி அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல், கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் கடந்த மூன்றாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் நடந்த 27 மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தலில் அதிமுக எப்படி வெற்றி பெற்றது என அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய அமைச்சர், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்ததாகவும், ஒரு சில இடங்களில் நூறு சதவீத வெற்றி வாய்ப்பு பெற்றதாகவும் அமைச்சர் கே சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். 

மேலும் காவிரி உபரி நீரை ஒரு சொட்டு கூட கடலில் கலக்காதவாறு மதுரை வைகையில் இணைக்கும் திட்டம் ரூ 9 கோடியில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kc karuppannan says local body election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->