கரூர் பேரதிர்ச்சி! 40 பேர் பலி!- விஜய் நேரில் சென்று குடும்பங்களை சந்திக்க திட்டம்
Karur 40 people killed Vijay plans to visit families person
கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சென்னையில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த ஆலோசனையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக விஜய் அறிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, இழப்பீடு வழங்குவதற்கான கரூர் பயண நேரம் மற்றும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்படி, விஜய் நேரடியாக கரூர் சென்று உயிரிழந்த குடும்பத்தினருடன் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, விஜய் கரூர் செல்ல முன் கட்சி நிர்வாகிகள் காவலில் அனுமதி மனு சமர்ப்பிக்க உள்ளனர்.
English Summary
Karur 40 people killed Vijay plans to visit families person