மீண்டும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு! உச்சநீதிமன்றத்தில் எம்எல்ஏக்கள்!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.ஏல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் அவர்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இதனையடுத்து பாஜக தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ், மஜத கொறடா உத்தரவிட்டும் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 பேரும் உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது தற்போதைய நிலை ஆகும். இது தொடர்பான வழக்கு இன்னும் அரசியல் சாசன பெஞ்சில் உள்ளது. 

தமிழகத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்ற 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு போல, தற்போது நடைபெற்று வரும் 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு போல இந்த வழக்கும் நீண்ட நாட்கள் நடைபெறும் என்பதில் மாற்றமில்லை. ஒருவேளை பாஜக ஆட்சிக்கு ஆபத்து வரும் பட்சத்தில், வழக்கில் திருப்பம் ஏற்படலாம். 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Rebel MLAs appeal against speaker disqualified decision


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->